Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, சுஜாதா ஆரம்ப காலத்துல எழுதினத விட கடந்த சில வருடங்களா எழுதினது அதிகம். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் ஒரு காரணம். அவரது சமீபத்திய படைப்புகள் ரொம்ப முக்கியமானவை:
  1. புறநானூறு ஒரு எளிய அறிமுகம்
  2. சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம்
  3. கற்றதும் பெற்றதும் (இதன் மூலமா தான் மனுஷ்ய புத்ரன் கவிதை பற்றி தெரிய வந்தது. 'நீராலானது' படிச்சுப் பாருங்க)
  4. 400 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)
  5. பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்
கடைசிக் காலம் என்று புரிஞ்சதுனாலையோ என்னமோ அவ்வப்போது எழுதற ஜனரஞ்சக குப்பைகளை விட்டுட்டு, அடுத்த தலைமுறைக்கு தமிழ்ல முக்கியமான விஷயங்கள அவருடைய பாணியில் அழகா சொல்லி இருக்கார். எகா புறநானூறுக்கு வழக்கமா எல்லாரும் எழுதற பொழிப்புரை விளக்கவுரை எழுதலை. ஒவ்வொரு பாடலுக்கும் ஓரளவு இணையான புதுக்கவிதை எழுதி இருக்கார். இந்த ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள அவரது முன்னுரைகளை பாடப் புத்தகத்தில போடலாம்.

சமீபத்துல தமிழ் புத்தகம் வாங்கி இருக்கீங்களா? இப்போ எல்லாம் அட்டகாசமா பதிப்பிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நிஜமாவே ஆங்கிலப் புத்தகங்களை தமிழ் புத்தகங்கள் தூக்கி சாப்பிடுது. அவ்வளோ அழகா இருக்கு. இது ஆரம்பிச்சது எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், உயிர்மை பதிப்பகம் சுஜாதா படைப்புகளை பதிப்பிக்க ஆரம்பிச்ச போது தான்.

இணையத்துல எழுத ஆரம்பிச்ச முதல் முக்கிய எழுத்தாளரும் அவர் தான்.

இத்தனை காலம் சுஜாதா பிரியனா இருந்தும் அவரது சிறந்த படைப்புகள் அவரது சிறுகதைகள் தான்னு ரொம்ப லேட்டாதான் தெரிய வந்தது. உயிர்மை பதிப்பகமும் அழகா அவருடைய படைப்புகள தொகுத்து வெளியிட்டுருக்காங்க.
  1. விஞ்ஞானச் சிறுகதைகள்
  2. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2 பாகங்கள்)
  3. ஸ்ரீரங்கத்துக் கதைகள்
  4. நாடகங்கள்
  5. குறுநாவல்கள்
என்ன மாதிரி சும்மா க்ரைம் நாவல் படிச்சுட்டு இருந்தவர்களுக்கு தீவிர இலக்கியத்துக்கு பாதை அமைச்சுக் கொடுத்தவரும் அவர் தான்.

அடுத்த தலைமுறைக்கு சரியான தளம் அமைச்சுட்டு போய் இருக்கார். தீவிர இலக்கியவாதிகளும் இதை மறுக்க இயலாது. World is such a poorer place without his presence.

அன்புடன்,
ரகு

பிகு: புத்தகங்களை இணையத்தில் வாங்க http://anyindian.com/

No comments: